நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்


நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2019 9:36 AM GMT (Updated: 16 Feb 2019 9:36 AM GMT)

சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25-ந் தேதிக்குள் அணுக நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

சந்திரனின்  சுற்று வட்ட பாதையில்  ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன. இதற்கு இரு நாடுகளும் ஒப்புதலும் தெரிவித்து உள்ளன.  இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ஆழ்ந்த விண்வெளி நுழைவாயில் ( Deep Space Gateway) என பெயரிடப்பட்டு உள்ளது. 

இந்த புதிய விண்வெளி நிலைய முதல் பகுதி  2024-2026-க்கும் இடைப்பட்ட காலங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இந்த புதிய விண்வெளி நிலையம்  நிலைகொள்ளும் இடமாக அமையும்.

இது குறித்து நாசா கூறும் போது, 

நாசா அடுத்த  கட்டமாக சந்திரனின்  சுற்றுப்பாதையில் ஆழ்ந்த வெளி நுழைவு வாயிலை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. செவ்வாய் கிரகம் உள்பட ஆழமான விண்வெளி இலக்குகளை அடைய அங்கு விண்வெளி மையத்தை கட்டும் சவாலான பணிகளுக்கான தேவையான அமைப்புகளை சோதனை செய்ய விண்வெளி வீரர்கள் தொடங்கி உள்ளனர்.

சந்திரனுக்கு அருகில் உள்ள விண்வெளி பகுதியானது மனித ஆற்றலுக்கான அனுபவத்தை பெறுவதற்காக ஒரு உண்மையான ஆழமான சூழலை வழங்குகிறது. ரோபாடிக் பயணங்கள் செய்ய சந்திர மேற்பரப்பு, வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு பதிலாக நாட்களில் பூமிக்கு திரும்பும் திறனைக் கொண்டிருக்கும்" என கூறியுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப வேண்டும் என்ற விண்வெளி கொள்கையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இது குறித்து நாசாவின் தலைமை நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறியதாவது:-

"இந்த முறை விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களை நாட உள்ளோம்.  ஆர்வமுள்ள நிறுவனங்கள் மார்ச் 25 ஆம் தேதிக்குள் அணுகலாம்" என கூறினார்.

Next Story