இம்ரான் கான் ராணுவம் கையிலிருக்கும் ஒரு பொம்மை- முன்னாள் மனைவி பேட்டி


இம்ரான் கான் ராணுவம் கையிலிருக்கும் ஒரு பொம்மை-  முன்னாள் மனைவி பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2019 3:33 PM GMT (Updated: 19 Feb 2019 3:33 PM GMT)

இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவம் கையிலிருக்கும் ஒரு பொம்மைதான் என அவருடைய முன்னாள் மனைவி பேசியுள்ளார்.


புல்வாமா தாக்குதல் நடந்து 6 நாட்கள் ஆன பின்னர் விளக்கம் அளித்து பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என கூறியுள்ளார். இந்தியா நடவடிக்கை எடுத்தால் நாங்கள் பதிலடியை கொடுப்போம் என கூறினார். இந்நிலையில் அவருடைய முன்னாள் மனைவி ரஹிம்கான் பேசுகையில், இம்ரான் கான் யாரோ எழுதி கொடுத்ததை பேசியுள்ளார்.  இம்ரான் கான் ராணுவம் கையில் உள்ள ஒரு பொம்மைதான். ராணுவம் கொடுக்கும் உத்தரவிற்காக இம்ரான் கான் காத்திருந்திருப்பார். 

இந்திய பிரதமர் வலியுறுத்துகிறார் என்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது, பாகிஸ்தானின் நலனுக்காக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையை எடுக்கவேண்டும். இம்ரான் கான் சரியாகவே பேசியிருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் கடந்த 7 மாதங்களில் எந்தஒரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லையே...” என பேசியுள்ளார் ரஹிம்கான். ஜெய்ஷ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் பாகிஸ்தான் வரலாறு கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


Next Story