உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 19 Feb 2019 10:45 PM GMT (Updated: 19 Feb 2019 7:00 PM GMT)

சிரியாவின் இத்லீப் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 24 பேர் உயிர் இழந்தனர்.


* காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் இழந்த 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் சிகாகோவில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி சென்றனர்.

* சிரியாவின் இத்லீப் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 24 பேர் உயிர் இழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் கோகினாய் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* வெனிசூலா ராணுவம் அனைத்தையும் இழந்துவிட்ட அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு விசுவாசியாக இருப்பதை நிறுத்திவிட்டு, இடைக்கால அதிபரான ஜூவான் குவைடோவுக்கு தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

* தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டேகு நகரில் ஆண்களுக்காக பொது குளியலறையில் திடீர் தீ விபத்து நேரிட்டதில் 2 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். 50 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

* ஏமனின் தியாஸ் மாகாணத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலியாகினர்.

* வங்காளதேசத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட விளையாட்டு இணைய பக்கங்களை அரசு முடக்கியது.



Next Story