சீன புத்தாண்டு வண்ண விளக்குகள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது


சீன புத்தாண்டு வண்ண விளக்குகள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது
x
தினத்தந்தி 20 Feb 2019 6:35 AM GMT (Updated: 20 Feb 2019 6:35 AM GMT)

சீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பெய்ஜிங்

சீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீனாவின் பல பகுதிகளில் நிலவு ஆண்டு முடிவடைந்ததை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தலைநகர் பெய்ஜிங்கில் லேசர் விளக்குகளின் நிகழ்ச்சி கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. இரவில் மின்னொளியில் ஜொலித்த  வண்ணமயமான அலங்காரங்கள் காண்போரை ஈர்த்தன. பாரம்பரிய நடனங்கள் என சீன கலாச்சார முறைப்படி திருவிழா நடைபெற்றது. இதில் முதல் முறையாக அரண்மனை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. 

வடமேற்குப் பகுதியான சின்ஜியாங் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தன. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் டிராகன், பொய்க்கால் குதிரை போன்று கலைஞர்கள் நடனமாடினர்.

Next Story