இந்தியா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு


இந்தியா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு
x
தினத்தந்தி 22 Feb 2019 5:13 AM GMT (Updated: 22 Feb 2019 5:13 AM GMT)

இந்தியா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஜிலானி மருத்துவமனைக்கு எழுதியுள்ள கடிதத்தில் போர்ச்சூழல் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் 25 சதவீத இடங்களை ராணுவத்தினருக்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் அதிரடித் தாக்குதல் நடத்தலாம் என ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 

பாகிஸ்தான் மக்களை பாதுகாக்கும் வலிமையும் திறனும் பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். நடந்த சம்பவம் (புல்வாமா தாக்குதல்) பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இந்தியாவிடம் இருந்து ஆக்கப்பூர்வமான பதில் வரும் என்று நம்புகிறோம்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாராவது பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதாக இந்திய அரசு தக்க ஆதாரங்களை கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது விபரீதமாகவோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story