தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவிப்பு


தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2019 6:21 AM GMT (Updated: 22 Feb 2019 7:09 AM GMT)

தென்கொரியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.

சியோல்,

இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில், தற்போது 2 நாட்கள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.  விருதை பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, ”இந்த விருது தனிப்பட்ட முறையில் எனக்காக வழங்கப்பட்டது இல்லை. 130 கோடி இந்தியர்களுக்கே இந்த விருது சாரும்” என்றார். 

உலக அமைதிக்குப் பங்களித்து வருபவர்களைப் பாராட்டும் நோக்கில், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் இந்த விருதை, தென் கொரிய அரசு வழங்கி வருகிறது. ஐ.நா.-வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோர் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதைப் பெற்றுள்ள 14-ஆவது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story