உலக செய்திகள்

தான்சானியா நாட்டில் சாலை விபத்தில் 19 பேர் பலி + "||" + 19 people killed in road accident in Tanzania

தான்சானியா நாட்டில் சாலை விபத்தில் 19 பேர் பலி

தான்சானியா நாட்டில் சாலை விபத்தில் 19 பேர் பலி
தான்சானியா நாட்டில் நடந்த சாலை விபத்து ஒன்றில் பெண்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தாருசலாம்,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் தெற்கு மலைப்பகுதியான சாங்வி மாவட்டத்தில் இருந்து துண்டுமா நோக்கி மினி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் சென்ஜிலி மலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு லாரி மீது மோதியதுடன், மினி பஸ் மீதும் பயங்கரமாக மோதியது.


இந்த விபத்தில் 15 பெண்கள் உள்பட 19 பேர் உயிர் இழந்தனர். இதில் சம்பவ இடத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜான் மகுஃபுலி இரங்கல் தெரிவித்துள்ளார்.