உலக செய்திகள்

பூனைக்கு ரூ.1,400 கோடி சொத்து: உலகின் பணக்கார விலங்கு + "||" + Rs 1,400 crore property to the cat: the world's richest animal

பூனைக்கு ரூ.1,400 கோடி சொத்து: உலகின் பணக்கார விலங்கு

பூனைக்கு ரூ.1,400 கோடி சொத்து: உலகின் பணக்கார விலங்கு
பாரீசில் உள்ள ஒரு பூனையின் சொத்துமதிப்பு ரூ.1,400 கோடியாகும். அந்த பூனை உலகின் பணக்கார விலங்காக கருதப்படுகிறது.
பாரீஸ்,

உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வாழ்ந்து வந்த இவர் 85 வயதில், கடந்த 19-ந்தேதி காலமானார். கார்ல் லாகெர்பெல்ட் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார். ‘சவ்பெட்’ என பெயர் கொண்ட அந்த பெண் பூனை மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.


கார்ல் லாகெர்பெல்ட் ஒரு பேட்டியின் போது, சட்டம் அனுமதித்ததால் தனது செல்லப்பிராணியான சவ்பெட்டை திருமணம் செய்து கொள்வேன் என்றும், கண்களின் வழியாக தாங்கள் இருவரும் உரையாடிக்கொள்வதாகவும் வேடிக்கையாக கூறினார். மேலும், சவ்பெட்டை தனது வாரிசாக அறிவித்த அவர், தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்தில் ஒரு பகுதி பூனைக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், கார்ல் லாகெர்பெல்ட் மறைவுக்குப் பின், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் சவ்பெட் பூனை பெயரில் உயில் எழுதப்பட்டிருப்பதாகவும், அதனை நிர்வகிக்க அறங்காவலர்களை நியமித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் உலகிலேயே பணக்கார விலங்கு என்ற பெயரை ‘சவ்பெட்’ பூனை பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீதை வேடத்தில் நயன்தாரா? ரூ.1,500 கோடியில் படமாகும் ராமாயணம்
ராமாயண காவியத்தை ஏற்கனவே பலர் படமாக்கி உள்ளனர். தற்போது இன்னொரு ராமாயண படத்தை ‘3டி’யில் எடுக்கின்றனர்.
2. ஆவடி பசுமை பூங்கா உள்பட ரூ.1,000 கோடி புதிய திட்டங்கள் ஒரே நாளில், எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
ஆவடி பசுமை பூங்கா உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், மேம்பாலங்களை ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
3. முதல்-மந்திரி பதவி ரூ.1,500 கோடிக்கு பேரம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி - பரூக் அப்துல்லா பகீர் குற்றச்சாட்டு
முதல்-மந்திரி பதவிக்கு ரூ.1,500 கோடிக்கு பேரம் பேசியதாக, ஜெகன்மோகன் ரெட்டி மீது பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.