உலக செய்திகள்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல் + "||" + The problem for wifes of H-1B visa holders in the United States - Work that deprives Terms filing

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அலுவலகத்தில் வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டினரை பணியமர்த்த அனுமதிப்பதற்கு எச்-1பி விசா பயன்படுகிறது. இதை பயன்படுத்தி, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அங்கு பணியாற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆவர். அவர்களின் வாழ்க்கை துணைகளும் (கணவர் அல்லது மனைவி) அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள்.


எச்-1பி விசா தவறாக பயன்படுத்தப்படுவதாக கருதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், எச்-1பி விசா பெற்றவர்களின் வாழ்க்கை துணைகள் பணியாற்றுவதற்கான அனுமதியை ரத்து செய்ய திட்டமிட்டார்.

இதற்காக, தற்போதைய விதிமுறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை வெள்ளை மாளிகை அலுவலகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு துறை நேற்று சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், வெள்ளை மாளிகை இறுதி முடிவு எடுக்கும். புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான இந்தியர்களுடைய வாழ்க்கை துணைகளின் பணிக்கு ஆபத்து காத்திருப்பதாக கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ டிரம்ப் தயார் - அமெரிக்கா அறிவிப்பு
காஷ்மீர் பிரச்சினையில் உதவுமாறு இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், அதை ஏற்க டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
2. அமெரிக்காவின் ஏவுகணை பரிசோதனை: ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று விவாதம்
அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை குறித்து இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெறவுள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா? - டிரம்ப் பதில்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா என்பது குறித்து டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
4. அமெரிக்கா: ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலி
அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலியானார்.
5. அமெரிக்காவில் ருசிகரம்: ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது.