இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்


இந்தியா -பாகிஸ்தான் இடையேயான  தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 23 Feb 2019 3:25 AM GMT (Updated: 23 Feb 2019 3:35 AM GMT)

இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன்,

புல்வாமா தாக்குதலுக்கு பிறகான இந்தியா- பாகிஸ்தான் இடையேயான  உறவு மிக மிக மோசமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது: “  தற்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான  உறவு மிக மிக மோசமாக உள்ளது. 

மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இந்த பகைமை நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவை நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடைமுறைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இந்த தாக்குதலில் 50 பேரை இந்தியா இழந்து இருக்கிறது. என்னாலும், இந்த சூழலை புரிந்து கொள்ள முடிகிறது. நடைபெற்ற இந்த சம்பவத்தால், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பிடமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த 1.3 பில்லியன் டாலர் தொகை நிதியை நான் நிறுத்தினேன்.  

பிற அதிபர்களின் கால காட்டத்தில் பாகிஸ்தான் பல சலுகைகளை பெற்று வந்தது. ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொகையை நாம் பாகிஸ்தானுக்கு செலுத்தி வந்தோம். பாகிஸ்தான் நமக்கு எப்படி உதவ வேண்டுமோ? அவ்வாறு செயல்படாததால், அந்நாட்டிற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தினேன். பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு கடந்த சில மாதங்களாக நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது” என்றார். 

Next Story