உலக செய்திகள்

சீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி: 30 பேர் காயம் + "||" + 20 workers killed in China silver mining accident: 30 injured

சீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி: 30 பேர் காயம்

சீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி: 30 பேர் காயம்
சீனாவில் வெள்ளிச் சுரங்கத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
பீஜிங்,

வடக்கு சீனாவில் மங்கோலியாவில் உட்புற பகுதியான மேற்கு உஜிம்கின் பன்னேரியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளிச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.

இதில் இன்மான் என்னும் நிறுவனத்தை சேர்ந்த ஒரு சுரங்கத்தில் வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சுரங்கத்துக்கு சுமார் 50 தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு பஸ் சுரங்கத்தின் அடிப்பகுதியில் செங்குத்தாக கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்சின் ‘பிரேக்’ செயலிழந்ததால், அது பயங்கரமாக பக்கவாட்டு சுவரில் மோதியது.

இந்த விபத்து காலை 8.30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, மீட்பு மற்றும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்கிறது
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளது.
2. இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா.... அமெரிக்கா எச்சரிக்கை செய்தி
மசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனா களமிறங்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக தெரியவந்துள்ளது.
3. சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு தடையா?
சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. சீனா, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல் ரூ.7 கோடி அரிய கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல் 2 பேர் கைது
இலங்கை, சீனாவுக்கு கடத்துவதற்காக சென்னையில் உள்ள குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட அரிய கடல்வாழ் உயிரினங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்
சீனாவுக்கு கழுதைகளை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்ய உள்ளது.