உலக செய்திகள்

அமெரிக்க தடுப்பு காவல் மையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி தகவல் + "||" + Thousands of children are sexually harassed in US detention centers

அமெரிக்க தடுப்பு காவல் மையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி தகவல்

அமெரிக்க தடுப்பு காவல் மையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவல் மையங்களில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

நியூயார்க், 

தடுப்பு காவல் மையங்களில் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழ்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க தடுப்பு காவல் மையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘‘2014 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 4,500–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச அகதிகள் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.