பாகிஸ்தான் கோர்ட்டில் அபிநந்தன் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி


பாகிஸ்தான் கோர்ட்டில் அபிநந்தன் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 1 March 2019 2:09 PM GMT (Updated: 1 March 2019 2:09 PM GMT)

பாகிஸ்தான் கோர்ட்டில் அபிநந்தன் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


இஸ்லாமாபாத்,

சமாதானத்துக்கான விருப்பத்தில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார் என்று இம்ரான் கான் நேற்று அறிவித்தார். இதனையடுத்து இந்திய விமானி அபிநந்தன் இன்று மாலை 4 மணிக்கு வாகா எல்லைக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே அவரை விடுதலை செய்யக்கூடாது என பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தான் வான் எல்லையை தாண்டி குண்டு வீசுவதற்காக வந்துள்ளார், பாகிஸ்தானுக்கு எதிராக குற்றம் புரிந்துள்ளார். அவர் இங்கு விசாரணையை எதிர்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அபிநந்தன் விடுதலை நேரத்தில் இந்த வழக்கு போடப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த வழக்கை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அதார் மினஹல்லா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story