உலக செய்திகள்

எப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம்: அமெரிக்க வெளியுறவுத்துறை + "||" + US seeks information on potential misuse of F-16 against Indian military installations

எப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம்: அமெரிக்க வெளியுறவுத்துறை

எப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம்: அமெரிக்க வெளியுறவுத்துறை
ஒப்பந்தத்தை மீறி, எப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம் செய்ததா? என்பது குறித்து தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா வான்பரப்புக்குள் கடந்த புதன்கிழமை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையை சேர்ந்த எப்-16 விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி செய்தன. அதில் ஒரு எப்-16 விமானம் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாகி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த எப்-16 விமானம் ஏவிய நடுத்தர இலக்கு ஏவுகணையான AIM-120 AMRAAM மட்டும் இந்திய பகுதிக்குள் விழுந்துவிட்டது.

மேலும் எஃப்-16 விமானங்களின் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் இந்திய விமானப் படை ரேடாரில் பதிவாகியுள்ளன. முப்படைகளின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் எப்-16 விமானங்களை பயன்படுத்தியுள்ளது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு தாங்கள் எப்-16 விமானம் எதையும் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு காரணம், எப்-16 விமானங்களை தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், வேறு எந்த நாட்டிற்கும் எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியவையாகும். இந்நிலையில், இதுகுறித்த தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோன் பாக்னர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் செய்துகொண்ட, பயன்பாட்டு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்த விவரங்களை ஒப்பந்தப்படி தெரிவிக்கக் கூடாது என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கோன் பாக்னர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை இல்லை : டிரம்ப்
அமெரிக்க பொருளாதாரம் 'மிகச் சிறப்பாக' செயல்படுவதாகக் கூறி அமெரிக்கா மந்தநிலையில் விழும் அபாயம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
2. அமெரிக்காவில் வினோதமான டிவி மனிதன்...
அமெரிக்காவில் வினோதமான டிவி மனிதன், வெர்ஜீனியா மாநிலத்தில் வசிக்கும் மக்களின் வீட்டு வாசல்களில் டிவி பெட்டிகளை விட்டு சென்றுள்ளார்.
3. காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - அமெரிக்கா சொல்கிறது
காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்கா கூறியுள்ளது.
4. அமெரிக்கா தனது 5 ஆயிரம் வீரர்களை திரும்ப பெற தலிபான்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் விலகுவது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளில் வேறுபாடுகள் தீர்க்கப்பட்டதாக தலிபான் கூறுகிறது.
5. தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு குறித்து விமர்சித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சிக்கு 3 மாதம் தடை
சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி 0–2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் பிரேசிலிடம் தோல்வி கண்டது.