உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை-வெள்ளம்; 20 பேர் பலி + "||" + In Afghanistan Heavy Rain-Flood; 20 killed

ஆப்கானிஸ்தானில் கனமழை-வெள்ளம்; 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கனமழை-வெள்ளம்; 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 20 பேர் பலியாயினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. தொடர் கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.


அர்கன்டாப், டாமான், ஸ்பின் போல்டாக், டாண்ட் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாகிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 10 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இந்த தகவலை ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பரிதாபம்: செயலிழக்க செய்தபோது குண்டு வெடித்து 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் செயலிழக்க செய்தபோது குண்டு வெடித்து 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
2. உலகைச்சுற்றி...
ஆப்கானிஸ்தானில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
3. ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாப சாவு
ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர்.
4. பிரேசிலில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் பலி
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது.
5. ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாயினர்.