இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடி நடவடிக்கை - ஈரான் எச்சரிக்கை


இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடி நடவடிக்கை - ஈரான் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 March 2019 1:01 PM GMT (Updated: 4 March 2019 7:06 PM GMT)

இந்தியாவை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெஹரான்,

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் 40 துணை ராணுவ வீரர்களை பலி கொண்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது குண்டுகளை போட்டன. இதில் சுமார் 350 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவை போன்று தாங்களும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடியான நடவடிக்கை எடுக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கூறுகையில், “நீங்கள் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்களது அண்டை நாடுகள் அனைத்திலும் அமைதியற்ற சூழலை உருவாக்கி உள்ளர்கள். எந்த அண்டை நாட்டையாவது விட்டு வைத்திருக்கிறீர்களா? சக்திவாய்ந்த அணுகுண்டுகளை வைத்திருக்கும் நீங்கள், உங்கள் மண்ணில் இருக்கும் சில நூறு பயங்கரவாதிகளை அழிப்பது கடினமா? என்று கேட்டார்.

கடந்த மாதம் 13-ந் தேதி பாகிஸ்தானின் எல்லையையொட்டிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஈரான் பாதுகாப்புபடை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 27 வீரர்கள் பலியானதும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புதான் காரணம் என ஈரான் அரசு குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

Next Story