உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பலி + "||" + Afghanistan: Terrorists killed 17 in suicide attacks

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பலியாயினர்.
காபூல்,

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் விமான நிலையத்திற்கு அருகே உள்ள கட்டுமான நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் நேற்று தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.

இன்று அதிகாலை தொடங்கி நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  


தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளில் 2 பேர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த நிலையில், மீதம் இருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
ஆப்கானிஸ்தானில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
2. ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாப சாவு
ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர்.
3. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
4. ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாயினர்.
5. நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும் - பிரதமர் மோடி பிரசாரம்
நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.