உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 9 March 2019 10:15 PM GMT (Updated: 9 March 2019 7:23 PM GMT)

பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் வெனிசூலா இருளின் பிடியில் சிக்கியது.


* தெற்கு ஆசியாவில் அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான்) மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது என்று அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு தலையங்கம் எழுதி எச்சரித்துள்ளது.

* பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் வெனிசூலா இருளின் பிடியில் சிக்கியது. இந்த நிலையில் ஐ.நா. உரிமைகள் குழு நாளை முதல் (திங்கள்கிழமை) அங்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. வெனிசூலா அரசின் அழைப்பில் இந்தக் குழு அங்கு செல்கிறது.

* ஆண்களின் வன்முறையை எதிர்த்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் பெண்கள், மகளிர் தினத்தன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கண்ணீர்ப்புகை, ரப்பர் குண்டுகளை வெடித்து விரட்டியடித்தனர்.

* பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அந்த நாடு தொடர்ந்து சர்வதேச சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் என்று இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. அமி பெரா எச்சரித்துள்ளார்.

* பெல்ஜியம் நாட்டில் பெண் உரிமைக்காகவும், ஆண்களுக்கு நிகரான சம உரிமை கோரியும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்தி, அந்த நாட்டையே அதிர வைத்துள்ளனர்.

* நைஜீரியா நாட்டில் 29 மாகாணங்களில் கவர்னர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது

* ஆண், பெண் என்னும் பாலின பேதத்தால் நடைபெறுகிற அரசியல் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை தலைவர் மரியா பெர்னாண்டா எஸ்பினோசா வலியுறுத்தி உள்ளார்.


Next Story