உலக செய்திகள்

புதிய நிபந்தனை விதிக்கிறார் டிரம்ப்: சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போடுமா? + "||" + Trump's new stipulation: Will the US trade deal with China?

புதிய நிபந்தனை விதிக்கிறார் டிரம்ப்: சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போடுமா?

புதிய நிபந்தனை விதிக்கிறார் டிரம்ப்: சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போடுமா?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய நிபந்தனைகளை விதிப்பதால், சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போடுமா என கேள்வி எழுந்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்து பதிலடி தந்தது.


ஆனாலும், அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இரு தரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கவும், ஜனவரி 1-ந்தேதி முதல் 90 நாட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கு, அமெரிக்கா மற்றும் சீன வர்த்தக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வாஷிங்டனில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். ஆனால், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன்” என திட்டவட்டமாக கூறினார்.

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. 2–வது பேச்சுவார்த்தை தோல்வி: வடகொரிய தலைவருடன் மீண்டும் சந்திப்பா? டிரம்ப் பேட்டி
வடகொரியா தலைவருடனான 2–வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2. காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தால் மசூத் அசாருக்கு தடை விதிக்க அனுமதியுங்கள் : சீனாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை
காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தால் மசூத் அசாருக்கு தடை விதிக்க அனுமதியுங்கள் என சீனாவை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.
3. ராணுவமயமாக்கலை தவிருங்கள், விண்வெளியில் அமைதியை நிலைநாட்டுங்கள் -பாகிஸ்தான், சீனா சொல்கிறது
விண்வெளியில் ராணுவமயமாக்கலை தவிருங்கள் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
4. அருணாசல பிரதேசத்தினை ஒரு பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்தது சீனா
அருணாசல பிரதேசத்தினை ஒரு பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன சுங்க துறை அதிகாரிகள் அழித்துள்ளனர்.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.