சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் - 50 பேர் பலி


சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் - 50 பேர் பலி
x
தினத்தந்தி 11 March 2019 5:29 PM GMT (Updated: 11 March 2019 5:29 PM GMT)

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

டமாஸ்கஸ்,

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரத்தில், அந்தக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா அரசு படைக்கும் இடையில் கடும் போர் நடந்து வருகிறது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள், அரசுப்படைகளால் தாக்குதல் நடத்தி கைப்பற்றப்பட்டன. 

நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டேய்ர் அல்-சோர் மாகாணத்துக்கு உட்பட்ட பக்ஹவுஸ் நகரில் உள்ள குறிப்பிட்ட சில பண்ணை நிலங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்தது. அவர்கள் அங்கிருந்து வெளியேற மார்ச் பத்தாம் தேதிவரை அரசு இறுதிக்கெடு விதித்திருந்தது. ஆனால், அவர்கள் சரணடைய மறுத்து விட்டனர்.

அரசு கொடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பக்ஹவுஸ் நகரின் மீது சிரியா அரசு படை மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் விமானங்கள் ஐ.எஸ். குழுவின் ஆயுதக் கிடங்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஐ.எஸ். குழுவின் முகாம் ஒன்று  தீப்பிடித்து எரிந்தது.

மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

Next Story