உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 7:07 PM GMT)

ஜப்பானின் புகுஷிமா நகரில் நேற்று 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


* ஜப்பானின் புகுஷிமா நகரில் நேற்று 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* மங்கோலியா நாட்டில் குவ்ஸ்குல் மாகாணத்தில், பனிக்கட்டியாக உறைந்த ஏரிக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* ஈராக்கின் சலாலூதின் மாகாணத்தில் துணை ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப, 8.6 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே சமயம் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

* பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பாலஸ்தீனர் ஒருவர் பலியானார்.


Next Story