உலக செய்திகள்

விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்...! விமானத்தை திருப்பிய விமானி...! + "||" + Pilot turns around flight after mother forgets baby at airport

விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்...! விமானத்தை திருப்பிய விமானி...!

விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்...! விமானத்தை திருப்பிய விமானி...!
விமான நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தையை மறந்து விட்டதால், விமானத்தை விமானி திருப்பிய விநோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
வெளியே செல்லும் போது நம்முடைய உடைமைகளை மறந்து விடுவது வழக்கமானது. ஆனால் பெண் ஒருவர் விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச்சென்ற அதிர்ச்சி மற்றும் விநோதமான சம்பவம் நடந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாக்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சவுதி அரேபியா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட பின்னர் பெண் ஒருவர் அழுதுள்ளார். அப்போது என்னுடைய குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டேன் என அழுதுள்ளார்.

உடனடியாக விமானி,  விமானத்தை விமான நிலையத்திற்கு திருப்ப கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதியை கோரியுள்ளார். அனுமதி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விமானி பேசும் 'கிளிப்' சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது விமானம் வானில் பறக்க தொடங்கி விட்டதா? அல்லது ரன்வேயில் செல்லும் போது நடந்ததா? என்பது தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
2. இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண், 2 குழந்தைகள் சாவு
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
3. குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
காரிமங்கலம் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
5. திடீரென காரின் மீது விழுந்த பனிக்கட்டி; அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண்
இங்கிலாந்தில் சாலையில் சென்ற காரின் மீது திடீரென பெரிய பனிக்கட்டி விழுந்த சம்பவத்தில் பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்துள்ளார்.