உலக செய்திகள்

கடலில் விழுந்த வாலிபர் ஜீன்ஸ் பேண்டை பயன்படுத்தி உயிர் தப்பினார் + "||" + A man survived hours lost at sea by turning his jeans into a flotation device, a trick used by US Navy SEALs

கடலில் விழுந்த வாலிபர் ஜீன்ஸ் பேண்டை பயன்படுத்தி உயிர் தப்பினார்

கடலில் விழுந்த வாலிபர் ஜீன்ஸ் பேண்டை பயன்படுத்தி உயிர் தப்பினார்
கடலில் விழுந்த வாலிபர் ஒருவர் தமது ஜீன்ஸ் பேண்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன
தொலாகா பே,

நியூசிலாந்தில் தொலாகா பே என்ற கடற்பகுதியில் கரையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆர்னே முர்கே என்பவர் கடலில் விழுந்து விட அவரது சகோதரர் அதை கவனிக்கவில்லை. சற்று நேரத்தில் ஆர்னேவை காணவில்லை என்பதை அறிந்த ரோவே,  நகராட்சி ஹெலிகாப்டர் மீட்பு சேவைக்கு தகவல் கொடுக்க, மூன்றரை மணி நேர தேடுதலுக்குப்பின் ஆர்னே முர்கே மீட்கப்பட்டார்.

ஆர்னே தமது ஜீன்ஸ் பேண்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர்வாழும் கலையை கற்றிருந்தார். எனவே, தமது ஜீன்ஸ் பேண்டில் காலின் நுனி பாகங்கள் இரண்டையும் முடிச்சுப்போட்டு அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது
தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 114 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
2. கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி பாதுகாப்புக்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவு
கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி, மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
3. குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை
குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
4. இங்கிலாந்து போலீசாரால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது
இங்கிலாந்து போலீசாரால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டார்.
5. குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற மாணவி
கேரளாவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.