உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
ஜப்பானின் வகாயாமா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

* அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் நகரில் இணையம் வழியாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக கிம் அங் வோ (வயது 20) என்கிற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

* ஜப்பானின் வகாயாமா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியவில்லை.

* மலேசியாவில் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து இந்தோனேசிய பெண் சித்தி ஆயிஷா விடுவிக்கப்பட்ட நிலையில், தங்கள் நாட்டை சேர்ந்த டோன் தி ஹூவாங்கையும் விடுதலை செய்ய வேண்டும் என மலேசியாவை வியட்நாம் வலியுறுத்தியுள்ளது.

* இருளில் தவித்து வந்த வெனிசூலாவில் மின் வினியோகம் தற்போது சீராகிவிட்டதாக அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

* ஏமனின் ஹொடைடா நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படைக்கும் இடையே நடந்த தாக்குதலில் 12 சிறுவர்கள் மற்றும் 10 பெண்கள் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

* நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 760 பேரை மீட்டனர். இந்த தாக்குதலில் 55 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி....
பிலிப்பைன்ஸ் நாட்டின் சரங்கானி மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
2. துளிகள்
போர்ட்எலிசபெத்தில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
3. உலகைச்சுற்றி...
ஜப்பானின் புகுஷிமா நகரில் நேற்று 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. உலகைச்சுற்றி.....
தைவானில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
5. ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு
ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருடப்பட்டது.