உலக செய்திகள்

சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் + "||" + On the same day in Syria 3 thousand IS The terrorists are Surrender

சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்

சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.
மாஸ்கோ,

சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.


எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரத்தில் மஞ்சள் பட்டாடையில் அத்திவரதர் ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் நேற்று 7-வது நாளில் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி அளித்தார். நேற்று ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் அவரை தரிசித்தனர்.
2. சிரியாவில் பயங்கர மோதல்: ராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழப்பு
சிரியாவில் நடந்த பயங்கர மோதலில் ராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர்.
3. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் - 50 பேர் பலி
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. சிரியாவில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் பயங்கரவாதியின் குழந்தை பலி
சிரியாவில் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் பயங்கரவாதியின் குழந்தை பலியானது.
5. உலகைச்சுற்றி....
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள கடைசி பகுதியை மீட்க அமெரிக்க கூட்டுப்படைகள் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.