உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
சோமாலியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சவுதி அரேபியா கூட்டுப்படைகளுக்கு, அமெரிக்க ராணுவம் உதவுவதை முடிவுக்கு கொண்டு வரும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் டிரம்ப் தனது ஓட்டுரிமை அதிகாரித்தை பயன்படுத்தி இந்த மாசோதாவை நிராகரிப்பார் என தெரிகிறது.

* சோமாலியாவில் அல் கொய்தாவின் ஆதரவு பெற்ற அல் ஷாபாப் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான மொசம்பிக் மற்றும் மலாவியில் இடைவிடாத கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 2 நாடுகளிலும் சேர்த்து 60 பேர் பலியாகினர். சுமார் 9 லட்சம் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

* ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து 2 முறை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இத்திட்டத்துக்கு எதிராக ஓட்டுப்போட்டதால் அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.