உலக செய்திகள்

மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை - பாகிஸ்தான் முடிவு + "||" + Cannot take action against JeM chief Masood Azhar Pakistan

மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை - பாகிஸ்தான் முடிவு

மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை -  பாகிஸ்தான் முடிவு
இந்தியா அளித்தது உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே மசூத் அசாரை கைது செய்ய போவதில்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத்,  

புல்வாமா தாக்குதலை அடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை சீனா தடுத்து விட்டது. பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கை வெளியிட்ட பாகிஸ்தானிடம்  புல்வாமா தாக்குதலில் மவுலானா மசூத் அசார் மற்றும் அந்த இயக்கத்தின் தொடர்பை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை இந்தியா வழங்கியது. 

அவற்றை ஆய்வு செய்த பாகிஸ்தான் அரசு, மசூத் அசாரை கைது செய்யவோ, விசாரணைக்காக காவலில் வைக்கவோ போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. 

‘‘எந்த குற்றத்திலும் மசூத் அசாருக்கு எதிராக ஆதாரம் இல்லாத போது அவரை ஏன் நாங்கள் கைது செய்ய வேண்டும்?’’ என கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியா அளித்த தகவல்களை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும், விசாரணை அமைப்புகளும் ஆய்வு செய்தன. அதில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர் தொடர்புக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவிடம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளன. இந்தியா அளித்த ஆவணங்களில் கூறப்படுகிறது என்ற வார்த்தைதான் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானை குற்றம் சாட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3. ‘மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது’ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
5. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.