உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 15 March 2019 8:45 PM GMT (Updated: 15 March 2019 8:45 PM GMT)

* உலக வெப்ப மயமாதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் 80 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை தாமதப்படுத்தக்கோரும் தீர்மானம் 210 ஓட்டுகள் வித்தியாசத்தில் நிறைவேறியது. அதே சமயம் ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக 2-வது தடவை பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தை எம்.பி.க்கள் நிராகரித்தனர்.

* நைஜீரியாவில் பள்ளிக்கூடத்துடன் கூடிய 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. 60-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

* சிரியாவில் 8 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் அப்பாவி மக்கள் எனவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து சர்வதேச கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் பலியாகினர்.

* உலகம் முழுவதும் சேவையை நிறுத்திவைத்தாலும், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் தயாரிப்பு தொடர்ந்து நடைபெறுவதாகவும், அதே சமயம் அதன் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* மொசம்பிக் மற்றும் மலாவி நாடுகளில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது.

Next Story