உலக செய்திகள்

உலகைச்சுற்றி.... + "||" + Around the world

உலகைச்சுற்றி....

உலகைச்சுற்றி....
பிலிப்பைன்ஸ் நாட்டின் சரங்கானி மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

* ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியை ‘இடாய்’ புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. அங்கு இந்தப் புயல், மழையில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். பலரை காணவில்லை.

* உள்நாட்டுப்போரால் தத்தளித்து வருகிற சிரியாவில், வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள முகாம்களில் தங்கி உள்ளவர்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் 117 குழந்தைகள் உயிரிழந்தனர்.


* உக்ரைன் விவகாரத்தில் ரஷிய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், ரஷிய நாட்டினர் 6 பேர் மீதும், 8 நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

* வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவது ஜூன் மாதம் வரை தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* பிலிப்பைன்ஸ் நாட்டின் சரங்கானி மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.6 புள்ளிகளாக பதிவானது. பல்வேறு நகரங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகவும், மக்கள் பதறியடித்துக்கொண்டு திறந்தவெளி மைதானங்களிலும், வீதிகளிலும் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

* உள்நாட்டுப்போர் நடந்து வரும் ஏமன் நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 12 பேர் காலரா கண்டு இறந்துள்ளதாகவும், அது 4 ஆயிரம் பேரை தாக்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* வியட்நாமில் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி கண்ட நிலையில், வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த முடியும் என நம்புவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
ரஷியாவின் கோமன்டர்ஸ்கை தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. உலகைச்சுற்றி...
ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. உலகைச் சுற்றி...
ஜப்பானின் தொரிஸ்கிமா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
4. உலகைச்சுற்றி...
பிலிப்பைன்சின் நோர்டே மாகாணத்தை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
5. உலகைச்சுற்றி....
ஒடிசாவை பந்தாடிய ‘பானி’ புயல், வங்காளதேசத்தை நேற்று பதம் பார்த்தது.