உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் படைகள் தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் பலி + "||" + 51 terrorists killed in attack in Afghanistan Force

ஆப்கானிஸ்தானில் படைகள் தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் படைகள் தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் பலியாயினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து அந்த நாட்டின் படைகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ் மாகாணத்தில் அவர்களை வேட்டையாடும் நடவடிக்கையில் படைகள் ஈடுபட்டன.


நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரையிலான 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கையில் அங்கு 51 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை ராணுவம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதி செய்துள்ளது.

ஆனால் இது பற்றி தலீபான் பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் கோட்டி சாங்கி மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் கார் டிரைவர் என கூறப்படுகிறது. உரிய நேரத்துக்கு முன்னதாகவே இந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை: 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியாகினர்.
2. உலகைச் சுற்றி...
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்த அழைப்பை ஏற்க முடியாது என தலீபான் பயங்கரவாதிகள் நிராகரித்து விட்டனர்.
3. ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த ஆளில்லா விமான தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தான் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதல்: 21 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில், 21 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.