உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.

* உள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்ற 17 லட்சத்து 12 ஆயிரத்து 264 பேர் தாயகம் திரும்புவதற்கு விரும்புவதாகவும், அதற்கான தருணத்துக்காக காத்திருப்பதாகவும் ரஷிய ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.


* நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி இந்த தாக்குதலை நடத்துவதற்கு 9 நிமிடத்துக்கு முன்னர் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் உள்பட 3 பேருக்கு இ–மெயில் அனுப்பி உள்ளார்.

* ஆசிய நாடுகளில் வாணிபம் செய்ய சீன ராணுவத்துக்கு கூகுள் நிறுவனம் உதவி செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

* ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மற்றும் கஜினி மாகாணங்களில் நடந்த 2 வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் மூத்த போலீஸ் அதிகாரி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

* இங்கிலாந்தில் வடக்கு இங்கிலாந்து, தெற்கு ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பல்வேறு நகரங்கள் வெள்ளகாடாகி உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
2. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி
காலே டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 267 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
5. நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.