உலக செய்திகள்

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? + "||" + Is Michael Jackson daughter trying to commit suicide?

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்?

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்?
மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

பாப் பாடல் உலகின் மன்னரான மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் (வயது 20) என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என 2 மகன்களும் உள்ளனர்.


மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன், தனக்கு அதிக மனரீதியிலான பிரச்சினை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் இதற்கு முன் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிஸ் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

‘லீவிங் நெவர்லேண்ட்’ என்கிற ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் பாரிஸ் ஜாக்சன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி பொய்யானது என பாரிஸ் ஜாக்சன் டுவிட்டரில் தெரிவித்தார். இந்த தகவலை பரப்பியவர்கள் ‘பொய்யர்கள்’ என அவர் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 மகள்களுடன், தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பெங்களூருவில், கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுத்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தற்கொலையை தவிர்ப்போம்
தற்கொலை என்பது குற்றமா? அல்லது தனிப்பட்டவர்களின் உரிமையா? என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே விடைகொடுத்து விட்டாலும் தற்கொலை தீர்வா? பிரச்சினைகளின் தொடக்கமா? அதைத் தவிர்க்க முடியுமா? தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
4. சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை
சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கடனை திருப்பி கொடுக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
5. ராமநாதபுரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை
ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.