மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்கிறது


மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்கிறது
x
தினத்தந்தி 18 March 2019 12:21 PM GMT (Updated: 18 March 2019 12:21 PM GMT)

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிப்பதை தடுக்கும் சீனா, 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மேற்கொண்ட 4 முயற்சிகளுக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்நிலையில் சீனா, 13,000 பயங்கரவதிகளை கைது செய்துள்ளதாக கூறியுள்ளது.

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமானோர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மாகாணத்தில்தான் 13,000 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம், 2014-ல் இருந்து 1,500 பயங்கரவாத கும்பல்கள் அகற்றப்பட்டுள்ளது என சீனா கூறியுள்ளது.

சின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமியர்களுக்கு தொழுகை முதல் ஆடை வரையில் பல்வேறு விவகாரங்களுக்கு சீன அரசின் உத்தரவைதான் பின்பற்ற வேண்டும். சின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் இஸ்லாமியர்கள் சீன அரசின் அடக்குமுறையின் கீழ் உள்ளனர். அங்கு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என சீன ராணுவம் அவ்வபோது நடவடிக்கையையும் முன்னெடுக்கிறது. அப்பகுதியானது ராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. 

சின்ஜாங்கில் மதம் மீதான கண்காணிப்பும் அழுத்தமும் தொடர்ந்து அதிகரிக்கிறது. மசூதிகளில் இளம் தலைமுறையினரை காண முடியாத நிலையும், வயதானவர்கள் தவிர மற்றவர்களிடம் தாடி இல்லாமல் உள்ள நிலையுமே தொடர்கிறது.

Next Story