உலக செய்திகள்

திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு + "||" + Dead whale washed up in Philippines had 40kg of plastic bags in its stomach

திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு

திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு
பிலிப்பைன்சில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு இருந்துள்ளது.
மணிலா, 

பிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிங்கலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

திமிங்கலத்தின் வயிற்றுக்குள் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்சிலும் உயிரிழந்த திமிங்கலம் வயிற்றிலிருந்து 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டது.

பெருங்கடல் பகுதியில் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்
திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டிப்போட்டு பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது.