உலக செய்திகள்

9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்ற பெண் + "||" + A girl with 6 babies in 9 minutes

9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்ற பெண்

9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்ற பெண்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவத்துக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சில தினங்களுக்கு முன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் அதிகாலை 4.50 முதல் 4.59 மணிக்குள், அதாவது 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்றுள்ளார். அதில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அப்பெண்ணுக்கு பிறந்துள்ளன.

எனினும் இந்த அதிசயமான பிரசவம்  470 கோடி பிரசவத்தில் ஒருமுறை நிகழும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பிறந்த 6 குழந்தைகளும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.