உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 7:32 PM GMT)

* ஹோண்டுராஸ் நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரு கிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

* சீனா-மங்கோலியா நாடுகளின் எல்லையில் 28 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை கைப்பற்றப்பட்டு பத்திரமாக செயலிழக்க செய்யப்பட்டன. இந்த குண்டுகள் அனைத்தும் 1939-ம் ஆண்டு நடந்த போரின் போது படை வீரர்களால் கைவிடப்பட்டவையாக இருக்கலாம் என தெரிகிறது.

* இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது. மாயமான 74 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

* சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் சவோலிங் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

* ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. அங்கு மழை, வெள்ளத்துக்கு இது

Next Story