உலக செய்திகள்

நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்திய துருக்கி வாலிபர் கைது + "||" + Netherlands gunfire: The attack was carried out Turkey Youth Arrested

நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்திய துருக்கி வாலிபர் கைது

நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்திய துருக்கி வாலிபர் கைது
நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய துருக்கி வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் ஐ.எஸ். பயங்கரவாதியா என போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராம்,

நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான உட்ரெச்சில் நேற்று முன்தினம் டிராம் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏறிய மர்மநபர் ஒருவர் திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 3 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி ஓடிய துருக்கி நாட்டை சேர்ந்த கோக்மென் டானிஸ் (வயது 35) என்பவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். எனினும் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கைது செய்யப்பட்டு இருக்கும் கோக்மென் டானிஸ், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் பங்கு இருக்குமோ என சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.