உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 20 March 2019 10:30 PM GMT (Updated: 20 March 2019 4:50 PM GMT)

* இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. 93 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

* பிரேசிலின் ஸா பாலோ நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் கடந்த வாரம் முன்னாள் மாணவர்கள் 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 மாணவர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்த முன்னாள் மாணவர்களுக்கு உதவி செய்த 17 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

* எகிப்தில் பிறநாடுகளை சேர்ந்த அகதிகளை நாட்டுக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 40 பேருக்கு தலா 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன வாலிபர் நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 2 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 2 நாட்களுக்கு பிறகு தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபரை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர்.

* துருக்கியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Next Story