உலக செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி : வார்னர் நிறுவன தலைவர் பதவி விலகல் + "||" + Sexual allegation: Warner limited chief resignation

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி : வார்னர் நிறுவன தலைவர் பதவி விலகல்

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி : வார்னர் நிறுவன தலைவர் பதவி விலகல்
ஹாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் பிரபல பட தயாரிப்பு நிறுவனம் ‘வார்னர் பிரதர்ஸ்’. “சூப்பர் மேன், பேட் மேன், ஹாரிபாட்டர்” உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப் படங்களை இந்நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
நியூயார்க்,

‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் கெவின் டுசுஜிஹாரா. இவர் தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் வாய்ப்பு வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி, இங்கிலாந்தை சேர்ந்த சார்லோட்டே கிரிக் என்ற நடிகையுடன் உறவு வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த புகார் தொடர்பாக ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில் கெவின் திடீரென தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனை ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் உறுதி செய்துள்ளது.