உலக செய்திகள்

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு + "||" + Ferry sinks in Tigris near Iraq's Mosul, killing 71

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு
ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
மொசூல்,

ஈராக் நாட்டில் புதுவருடத்தினை முன்னிட்டு பொதுமக்கள் அதனை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மொசூல் நகரருகே டைக்ரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகில் இருந்தவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனால் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 71 பேர் வரை பலியாகி உள்ளனர்.  19 குழந்தைகள் உள்பட 55 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  படகில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தது நெரிசல் ஏற்படுத்தி உள்ளது.

இதனுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டபொழுது படகு கவிழ்ந்து உள்ளது.  படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து நடந்துள்ளது.  படகில் இருந்த பயணிகளை மீட்க அந்த பகுதியில் வேறு படகுகளும் இல்லை.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தான்சானியாவில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
தான்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி
மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்றின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
3. நாகர்கோவில் பயிற்சி மையத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசம்
நாகர்கோவிலில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.
4. சேலம் அருகே, விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர், நகையை திருடிய கும்பல்
சேலம் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளியின் ஸ்கூட்டர் மற்றும் நகையை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
5. அறந்தாங்கி வாகன உதிரி பாக விற்பனை கடையில் தீ விபத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
அறந்தாங்கியில் உள்ள வாகன உதிரி பாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.