உலக செய்திகள்

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 6 பேர் பலி, ஓட்டுநர் சுட்டுக்கொலை + "||" + Six dead as car hits crowd in China, police kill driver: state media

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 6 பேர் பலி, ஓட்டுநர் சுட்டுக்கொலை

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 6 பேர் பலி, ஓட்டுநர் சுட்டுக்கொலை
சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 6 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை தொடர்ந்து கார் ஓட்டுநரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
பெய்ஜிங்,

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சோயாங் நகரத்தில் இன்று, மக்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் பயங்கர வேகத்தில் புகுந்தது. கார் தொடர்ந்து நிற்காமல் அங்கு நின்ற மக்கள் மீது மோதிக்கொண்டு சென்றதில், 6 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். கார் தொடர்ந்து நிற்காமல் சென்றதையடுத்து, போலீசார் காரின் ஓட்டுநரை சுட்டுக்கொலை செய்தனர். இந்த தகவலை சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

சமீப காலமாக சீனாவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூனான் மாகாணத்தில் உள்ள பொதுஇடத்தில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது. இதில், 11 பேர் பலியாகினர். இதையடுத்து காரின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். வஞ்சக நோக்கத்துடன் திட்டமிட்டு காரை மக்கள் கூட்டத்திற்குள் செலுத்தியதாக போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர்.

அதேபோல், நவம்பரிலும் ஆரம்ப பள்ளி வாயில் முன்பு உள்ள தெருவை கடந்து சென்ற பள்ளி சிறார்கள் மீது, கார் மோதியதில் 5 சிறார்கள் பலியாகினர். 19 பேர் காயம் அடைந்தனர். தற்கொலை எண்ணத்தில் சென்றபோது, இந்த தாக்குதலை நடத்தியதாக காரின் ஓட்டுநர் தெரிவித்ததாக பின்பு தகவல் வெளியானது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
சீனாவில் அடுத்த ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பதற்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் சூளுரைத்துள்ளார்.
2. சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி
சீனாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாயினர்.
3. சீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது
சீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் 23 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
4. உலகைச்சுற்றி...
சீனாவில் யுனான் மாகாணத்தில் நடந்த சுரங்க வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
5. உலகைச் சுற்றி...
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து நேரிட்டதில் பலியானோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.