உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 4:48 PM GMT)

* ரஷிய நாட்டின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சரக்கு கிடங்கு ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

* நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து, மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களாக திகழ்வதற்கு செயல் திட்டம் ஒன்றை தீட்டப்போவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறி உள்ளார்.

* சீனாவில் ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.

* அடுத்த மாதம் நடக்க உள்ள நேட்டோ வெளியுறவு கூட்டம் பற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும், நேட்டோ தலைமைச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கும் வாஷிங்டனில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

* வெனிசூலாவின் பாண்டெஸ் வங்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதை வெனிசூலா வெளியுறவுத்துறை அமைச்சகம் சட்டவிரோதமானது என கூறி சாடி உள்ளது.

* ஈராக்கில் படகு கவிழ்ந்து 105 பேர் பலியாகியுள்ள சம்பவத்தில், 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிற நிலையில், அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


Next Story