சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிப்பு - அமெரிக்க கூட்டுப்படை அறிவிப்பு


சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிப்பு - அமெரிக்க கூட்டுப்படை அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2019 11:15 PM GMT (Updated: 23 March 2019 5:44 PM GMT)

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு உள்நாட்டுப்படைகளுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் களம் இறங்கின.

டமாஸ்கஸ், 

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்து பல நகரங்கள் மீட்கப்பட்டன. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த கடைசி பகுதியான பாகுஜ் என்ற இடத்தில், அவர்களை வீழ்த்துவதற்காக குர்துக்கள் தலைமையிலான சிரிய உள்நாட்டுப்படைகள் கடுமையாக சண்டையிட்டு வந்தன. அங்கிருந்த அப்பாவி மக்கள் வெளியேறுவதற்காக இந்தப் படையின் தாக்குதல் சற்றே மிதமாக இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் தாக்குதல் கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அங்கிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என அமெரிக்க கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன. இதையொட்டி அதன் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “சிரியாவில் 100 சதவீதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்” என குறிப்பிட்டார். பாகுஜ் பகுதியில் சிரியாவின் உள்நாட்டுப்படைகள் தங்கள் தேசியக்கொடியை ஏற்றி உள்ளனர்.

Next Story