சீனாவில் சுற்றுலா பஸ் தீப்பிடித்து விபத்து : 26 பேர் பலி


சீனாவில் சுற்றுலா பஸ் தீப்பிடித்து விபத்து : 26 பேர் பலி
x
தினத்தந்தி 23 March 2019 11:30 PM GMT (Updated: 23 March 2019 6:48 PM GMT)

சீன நாட்டில் ஹூனான் மாகாணத்தில் சாங்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.

பீஜிங், 

பஸ்சில் 53 பயணிகள், 2 டிரைவர்கள், ஒரு சுற்றுலா வழிகாட்டி இருந்தனர். திடீரென அந்தப் பஸ்சில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ, பஸ் முழுவதும் பரவியது. அதில் இருந்த பயணிகள் அலறித்துடித்தனர். 

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 26 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் 5 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. பஸ்சின் 2 டிரைவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story