உலக செய்திகள்

அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை + "||" + United Airlines Boeing 787 jet from Australia diverted after smoke from cockpit Official

அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை

அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை
அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை வெளியானதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரை நோக்கி புறப்பட்ட யுனைட்டேட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 விமானத்தில் திடீரென விமானிகள் அறையில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து விமானம் பிரஞ்சு பசிபிக் பிராந்தியமான நியூ கலேடோனியாவிற்கு திருப்பப்பட்டது. அங்கு கண்ட்ரோல் அறையின் அனுமதியை பெற்று உடனடியாக தரையிறங்கியது. 256 பயணிகளுடன் சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எத்தியோபியாவில் போயிங்  737 மேக்ஸ் 8 விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சி: 2 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
2. அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி - சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
3. இத்தாலியின் ‘டயட் பீட்சா’
சமீபத்தில்தான் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்
4. யார் பயங்கரவாதி? அமெரிக்கா-ஈரான் வரலாறு காணாத மோதல்
அமெரிக்கா-ஈரான் இடையே வரலாறு காணாத மோதல் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத பரவலால் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த ஈரானுடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்தின.
5. ஜமால் கசோக்கி கொலை: சவுதியை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்கா தடை
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் எனக்கூறி சவுதியை சேர்ந்த 16 பேர், நாட்டுக்குள் வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.