உலக செய்திகள்

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு - சீனா ஆய்வாளர்கள் சாதனை + "||" + The discovery of the fossil fossils of 52 billion years ago - China inspectors achievement

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு - சீனா ஆய்வாளர்கள் சாதனை

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு - சீனா ஆய்வாளர்கள் சாதனை
52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்களை கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்தனர்.
பீஜிங்,

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதைபடிமமான பல உயிரினங்களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்புகள் மிகவும் நேர்த்தியாக புதைபடிமமாகி பதனமாகி இருப்பதாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதாலும் இதை பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு என்று புதை படிமவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.