அருணாசல பிரதேசத்தினை ஒரு பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்தது சீனா


அருணாசல பிரதேசத்தினை ஒரு பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்தது சீனா
x
தினத்தந்தி 26 March 2019 9:52 AM GMT (Updated: 26 March 2019 9:52 AM GMT)

அருணாசல பிரதேசத்தினை ஒரு பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன சுங்க துறை அதிகாரிகள் அழித்துள்ளனர்.

பெய்ஜிங்,

இந்தியாவின் வடகிழக்கு பகுதியாக அருணாசல பிரதேசம் உள்ளது.  இதனை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி வருகிறது.  தனது நிலைப்பாட்டை எடுத்துரைக்க அருணாசல பிரதேசத்திற்கு செல்லும் இந்திய தலைவர்களுக்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால், இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம் அருணாசல பிரதேசம் என கூறிவருவதுடன், நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதுபோல் அருணாசல பிரதேசத்திற்கும் இந்திய தலைவர்கள் சென்று வருகின்றனர் என இந்தியா கூறியுள்ளது.

இதுபற்றி இரு நாடுகளும் இதுவரை 21 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.  தைவான் தீவையும் தனது ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி வருகிறது. 

இந்த நிலையில், தைவானை தனி நாடாகவும் மற்றும் சீனா மற்றும் இந்திய எல்லையை தவறாகவும் காண்பிக்க கூடிய வகையில் அருணாசல பிரதேசத்தினை ஒரு பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரைபடத்தினை சீன சுங்க துறை அதிகாரிகள் அழித்துள்ளனர்.  இந்த வரைபடங்கள் பெயர் வெளியிடப்படாத நாடு ஒன்றிற்கு ஏற்றுமதியாக இருந்தது என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Next Story