விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து


விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து
x
தினத்தந்தி 27 March 2019 11:00 PM GMT (Updated: 27 March 2019 7:26 PM GMT)

விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் மிதந்து கொண்டு வேலை செய்வது வழக்கம். இதுவரை இந்தப் பணிகளை பெண்கள் மட்டுமே செய்தது கிடையாது. அதாவது ஆண் விண்வெளி வீரர்களின் துணையுடன்தான் விண்வெளி வீராங்கனைகள் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மார்ச் 29-ந் தேதி முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக கிறிஸ்டினா கோச் மற்றும் அன்னே மெக்லைன் என்ற 2 விண்வெளி வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், விண்வெளியில் பயன்படுத்தும் ஆடை பற்றாக்குறையின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை நாசா நிறுவனம் ரத்து செய்துவிட்டது.


Next Story