உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 29 March 2019 10:30 PM GMT (Updated: 29 March 2019 8:00 PM GMT)

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், 11-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்.


* தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், 11-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுதல் பற்றி இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

* வங்காளதேசத்தின் டாக்கா நகரில் உள்ள 22 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தில் ஜவுளிக் கடைகள், இணையதள சேவை மையங்கள் உள்ளிட்டவை அமைந்திருந்து, அவற்றில் விபத்தின்போது பலர் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

* ரஷிய நாட்டின் காம்சாட்கா தீபகற்ப பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் உண்டா என்பது பற்றி உடனடியாக தெரியவரவில்லை.

* ஓ.பி.ஓ.ஆர். என்னும் பட்டுப்பாதை திட்டம் உள்ளிட்ட சீன திட்டங்களால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறி உள்ளார்.

* சிரியாவில் கவுட்டா பகுதியில் பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற 100 டன் வெடிபொருட்களை கண்டறிந்து கடந்த ஓராண்டில் ராணுவம் அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



Next Story