பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை: இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தல்


பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை: இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 March 2019 11:00 PM GMT (Updated: 30 March 2019 8:06 PM GMT)

பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க இந்தியா-அமெரிக்கா அரசுகள் கூட்டாக வலியுறுத்தி உள்ளது.

வாஷிங்டன்,

இந்தியா- அமெரிக்கா சார்பில் பயங்கரவாத ஒத்துழைப்பு கூட்டுக்குழு கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. அதிகாரிகள் மட்ட அளவிலான இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலாளர் மகாவீர் சிங்வி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு இரு நாட்டு அதிகாரிகளும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது அந்நாட்டு அரசு தயக்கமின்றி, அர்த்தமுள்ள நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் ஒத்துழைப்பை இரு நாடுகளும் மேலும் வலுப்படுத்தி கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி உதவி மற்றும் தகவல் தொடர்பை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

Next Story